“Get Ready to Serve with Pride – Tamil Nadu Police Coaching” in Magmemedal

TNUSRB SI/Police Eng/தமிழ்
1200+ hours coaching / 12 months
7 Books & 120+ DPP Sheets
220+ SACUM Test (ABCDE Pattern)
460+ Topicwise Online Test
30+ Full mock tests
Daily,Weekly,Monthly CA
Speed Maths & Psychology Special Class
Tamil Eligibility Spl.Focus
Magme Mega Circle
Course Fee: ₹22,750.00
காவல் கனவுகள் மெய்பட Join now
தமிழ்நாடு காவல் சார்பு ஆய்வாளர்(SI)-ஊதியம்
- Pay Scale: ₹36,900 – ₹1,16,600/month
- Starting Basic Pay: ₹36,900/month
- In-Hand Salary: Approxi ₹57,384/month
தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர்கள்
- Pay Scale: ₹18,200 – ₹52,900/month
- New pay scale: ₹21,700 – ₹69,100/month
- In-Hand Salary: Approxi ₹49,830/ month
Police Job Roles in Tamil Nadu:
- Inspector of Police (Insp)
- Sub-Inspector of Police-Taluk/Armed/Tech/Fingerprint
- Assistant Sub Inspector of Police (ASI)
- Special Sub-Inspector of Police (SSI)
- Head Constable (HC)
- Constable Gr.I & Gr.II(PC)
- Jail Warder & Fireman
Latest Notification:Clickhere

Recruitment |
Age Years |
Educational Qualification |
Height in cm |
Chest in cm |
|
Men |
Women |
||||
Sub-Inspector of Police(Taluk, AR, TSP),Station Officer |
20 to 30 |
Any Degree |
170 |
159 |
Min 81cm -Exp 5cm |
Sub-Inspector of Police (Technical) |
20 to 30 |
Dip in ECE or B.E/B.Tech ECE |
163 |
154 |
Min 80cm -Exp 5cm |
Sub-Inspector of Police(Finger Print) |
20 to 30 |
Degree in Science(10+2+3) |
163 |
154 |
Not applicable |
Police Constables Gr.I / II , Jail Warders, Firemen |
18 to 26 |
10th |
170 |
159 |
Min 81cm -Exp 5cm |
Recruitment |
BC, BC(Muslim), MBC/DNC |
Age SC|ST |
Destitute Widow |
Ex-servicemen |
|||
Age |
Age |
Height (M) |
Height (F) |
Age |
Age |
Height & Chest |
|
Sub-Inspector of Police(Taluk, AR, TSP) Station Officer |
32 years |
35 years |
167 cms |
157 cms |
37 years |
47 years |
Exempted |
Sub-Inspector of Police(Technical) |
32 years |
35 years |
160 cms |
152 cms |
37 years |
47 years |
No Exemption |
Sub-Inspector of Police(Finger Print) |
32 years |
35 years |
160 cms |
152 cms |
37 years |
47 years |
Exempted |
Police Constables Gr.I / II , Jail Warders, Firemen |
28 years |
31 years |
167 cms |
157 cms |
37 years |
47 years |
Exempted |
Open Competition |
31% |
Backward Class |
26.5% |
Backward Class (Muslim) |
3.5% |
Most Backward Class / Denotified Communities |
20% |
Scheduled Caste |
15% |
Scheduled Caste (Arunthathiyar) |
3% |
Scheduled Tribe |
1% |
Community Certificate issued by Tamil Nadu Government only will be considered for communal reservation |
Upcoming Exams & Important Dates
1. காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (ஒருங்கிணைந்த தேர்வு)
2. காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்)
3. காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை)
4. இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (பொதுத்தேர்வு) more
Direct Recruitment For The Posts Of Sub-Inspectors Of Police – 2025
- Date of Notification: 04.04.2025
- Online Application: 07.04.2025
- Last date of Online Application : 03.05.2025
- Last date for correction Application : 13.05.2025
Subjects Covered:
![]() தமிழ்|இலக்கணம்|இலக்கியம் more |
![]() Gen-Sci.Physics | இயற்பியல் more |
![]() Economy |பொருளாதாரம் more |
![]() Quantitative|கணிதம் more |
![]() Chemistry| வேதியியல் more |
![]() Geography|புவியியல் more |
![]() Psy-Reasoning|உய்த்துணர்தல் more |
![]() Physical Train|உடல்தகுதி பயிற்சி more |
Tamil Nadu Uniformed Services Recruitment Process
பொது மற்றும் துறை சார்ந்
காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு
1. கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..
2. வயது :
விண்ணப்பதாரர்கள் அறிவிக்கை வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 30 வயது நிறைவுபெறாதவராகவும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:-
பிரிவு |
உச்ச வயது வரம்பு |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் |
32 வருடங்கள் |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் |
35 வருடங்கள் |
திருநங்கை |
35 வருடங்கள் |
ஆதரவற்ற விதவை |
37 வருடங்கள் |
முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் மத்திய காவல் ஆயுதப்படையினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் முன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் / மத்திய காவல் ஆயுதப் படையினர் |
47 வருடங்கள் |
துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் |
47 வருடங்கள் |
3. வகுப்புவாரி இட ஒதுக்கீடு:
அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:-
பொதுப் பிரிவினர் |
31% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
26.5% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) |
3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் |
20% |
ஆதிதிராவிட வகுப்பினர் |
15% |
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் |
3% |
பழங்குடியின வகுப்பினர் |
1% |
ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
4. சிறப்பு ஒதுக்கீடுகள் :
அ) காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை காலிப் பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
(i) 20% காவல் துறை இடஒதுக்கீடு.
இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் இவர்களுக்கு சமமான பதவியில் உள்ள சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உள்ளவர்கள் 20% காவல் துறை இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை தேதிக்கு முந்தைய ஜூலை 1ஆம் தேதி அன்று 5 வருடங்கள் பணி நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். காவல் துறை இடஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும்.
(ii) 20% தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீடு.
தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் தீயணைப்போர், முன்னனி தீயணைப்போர், தீயணைப்போர் ஓட்டி, எந்திர கம்மியர் ஓட்டி ஆகியோர் 20% தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை தேதிக்கு முந்தைய ஜூலை 1ஆம் தேதி அன்று 5 வருடங்கள் பணி நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை இடஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும்.
ஆ) 7% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு (காவல் துறைக்கு மட்டும்).
7% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பதாரர்களைப் போலவே அனைத்துத் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- 1 அல்லது படிவம் - 2 அல்லது படிவம் - 3, பெற்றிருத்தல் வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டைக் கோருவதற்குத் தேவையான சான்றிதழ்களின் விவரங்கள் பின்வருமாறு.
விளையாட்டு படிவத்தின் வகை |
பங்குபெற்ற நிலையின் விவரம் |
வழங்கும் அலுவலர் |
படிவம்-I |
இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர். |
சம்மந்தப்பட்ட விளையாட்டின், தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர் |
படிவம்-II |
தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டவர் |
சம்மந்தப்பட்ட விளையாட்டின், தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் செயலாளர் அல்லது மாநில விளையாட்டு சங்கத்தின் செயலாளர் |
படிவம்-III |
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டவர். |
இயக்குநர் அல்லது பல்கலைக் கழகத்தின் விளையாட்டு பொறுப்பு அதிகாரி |
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் : -
1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16.சிலம்பம்.
இ. மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கான 3% ஒதுக்கீடு
G.O.(Ms). No.116, Home (Police.3) Department -ன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 3% இடஒதுக்கீட்டின் கீழ் மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களை நியமிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் முறைகள். தேதி: 07.03.2025.
(i) அதிகபட்ச வயது வரம்பு - 35 வயது
(ii) கல்வித்தகுதி – தற்போதைய விதிமுறைகளின்படி பொது விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியே இவ்வொதுக்கீட்டிற்கும் பொருந்தும்.
(iii) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்க தகுதியான விளையாட்டுகள் - G.O.(Ms). எண். 6, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு (S1) துறையின், தேதி 20.02.2019-ல் குறிப்பிட்டுள்ள தற்போது நடைமுறையில் உள்ள திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.
(iv) உடற்கூறு அளத்தல், உடல் உறுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் தற்போதைய விதிமுறைகளின்படி பொது விண்ணப்பதாரர்களைப் போலவே நடத்தப்படும்.
(v) மெச்சத்தக்க வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
(vi) பிரிவு ஒதுக்கீடு (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) - வகுப்புவாரி சுழற்சி முறையைப் பின்பற்றாமல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையிலும் மற்றும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.
(vii) மருத்துவ பரிசோதனை, முந்தைய குற்ற நடவடிக்கைகள் மற்றும் குண நலன்கள் குறித்த விசாரணை – தற்போது உள்ள விதிமுறைகளின்படி பொது விண்ணப்பதாரர்களைப் போலவே நடத்தப்படும்.
(viii) 3% மெச்சத்தக்க வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில், அக்காலிப்பணியிடங்களை 7% விளையாட்டு ஒதுக்கீட்டோடு சேர்த்து, அந்தப் பதவிக்குப் பொருந்தக்கூடிய வழக்கமான தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி நிரப்பப்படும். அதன்பிறகும், 7% காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில், அது G.O.(Ms).No.960, உள்துறை (காவல்துறை - 3), தேதி 18.12.2014 -ன் படி தகுதிவாய்ந்த பொது விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
(ix) மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஈ. 10% சார்ந்துள்ள வாரிசுக்கான இடஒதுக்கீடு (காவல் துறைக்கு மட்டும்).
(i) பணியிலுள்ள/ ஒய்வு பெற்ற/ மரணமடைந்த / மருத்துவரீதியாக இயலாமையினால் ஓய்வு பெற்ற காவல் பணியாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சார்ந்துள்ள வாரிசுகள் இச்சலுகையை பெறலாம்.
(ii) சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழை, பெற்றோர் தாங்கள் பணிபுரியும் / கடைசியாக பணியாற்றிய அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் பதவி நிலைக்கு குறையாத உரிய அதிகாரியிடத்தில் பெற வேண்டும்.
(iii) சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழ் இத்தேர்விற்கான அறிவிக்கைத் தேதிக்குப் பின்னர் பெற்றிருக்க வேண்டும்.
(iv) விண்ணப்பதாரர், சார்ந்துள்ள வாரிசுக்கான சான்றிதழைப் முறையான படிவத்தில் பெறவில்லையெனில் அவர் பொது விண்ணப்பதாரராகக் கருதப்படுவார்.
(v) களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்ககளின் சார்ந்துள்ள வாரிசு ஒதுக்கீட்டிற்கு ஒரே ஒரு வாரிசுதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
(vi) விண்ணப்பதாரர் ஏற்கனவே மத்திய / மாநில அரசின் பணியிலிருந்தால் சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர்.
(vii) வாரிசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்திட தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், அக்காலிப்பணியிடங்கள், அதே வகுப்பினரைச் சார்ந்த பொது பிரிவிற்க்கு மாற்றம் செய்யப்படும்.
5. தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கான 20% முன்னுரிமை
முதலாம் வகுப்பிலிருந்து இளங்கலை பட்டப்படிப்பு வரை (தகுதி வாய்ந்த இளங்கலை பட்டம்) தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்ற பொது விண்ணப்பதாரர்களுக்கு மொத்த காலி பணியிடங்களில் 20% பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்.
6. சிறப்புப் பிரிவினருக்கான சலுகைகள் :
அ. முன்னாள் இராணுவத்தினர் / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள மத்திய ஆயுத காவல் படையினர்:
1. வயது தளர்வு 47 வருடங்கள் வரை வழங்கப்படும்.
2. பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறாத முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறாத முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல் படையினர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
ஆ. ஆதரவற்ற விதவை :
1. வயது தளர்வு 37 வருடங்கள் வரை வழங்கப்படும் .
2."ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்" வருவாய் கோட்ட அலுவலர் (RDO) /சார் ஆட்சியர் (Sub-Collector) - /உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் ஆதரவற்ற விதவைக்கான பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
7. திருநங்கை (காவல் துறைக்கு மட்டும்) :
i. வயது தளர்வு 35 வருடங்கள் வரை வழங்கப்படும்.
ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்து கொண்டு உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினம் என விண்ணப்பித்தால் அவர்கள் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.
iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று வகுப்புவாரி ஒதுக்கீடு பயன்பெறலாம்.
v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.
8.பொது மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு:
வ.எண் |
விவரம் |
பொது |
துறை ஒதுக்கீடு |
1. |
எழுத்துத் தேர்வு |
70 மதிப்பெண்கள் |
85 மதிப்பெண்கள் |
2. |
உடல்திறன் தேர்வு |
15 மதிப்பெண்கள் |
விலக்கு அளிக்கப்பட்டது |
3. |
நேர்முகத்தேர்வு |
10 மதிப்பெண்கள் |
10 மதிப்பெண்கள் |
4. |
சிறப்பு மதிப்பெண்கள் |
05 மதிப்பெண்கள் |
05 மதிப்பெண்கள் |
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
100 மதிப்பெண்கள் |
9. பொது விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :
அ. எழுத்துத் தேர்வு
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:
i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.
iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கான 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான கால அளவு 100 நிமிடங்கள்.(1 மணி 40 நிமிடங்கள்).
iv. தமிழ் மொழித் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே அடுத்த கட்ட முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மதிப்பீடு செய்ய தகுதிவாய்ந்தவர் ஆவர்.
v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.
vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீடு இரண்டிற்கும் சேர்த்து விண்ணப்பித்தவர்கள் பொதுவாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒரு முறை மட்டுமே எழுதவேண்டும்.
பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:
முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ) - பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):- தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்புதிறன் (Communication Skills), மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.
1. பகுதி (அ) – 40 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 80 கேள்விகள்.
2. பகுதி (ஆ) – 30 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 60 கேள்விகள்.
3. ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள்.
4. தேர்வுக்கான கால அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.
5.விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
6. அனைத்து கேள்விகளும் இரு மொழிகளில் (தமிழ் & ஆங்கிலம்) இருக்கும்.
ஆ. சான்றிதழ் சரிபார்த்தல் :
(i) பொது விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்த்தல் உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளுக்கு முன்னர் நடைபெறும்.
(ii) சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.அவ்வாறு விண்ணப்பதாரர் அசல் சான்றிதழை சமர்ப்பிக்கத் தவறினால், வகுப்புவாரி,வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டை இழப்பர்.
இ. உடற்கூறு அளத்தல் தேர்வு :
உயரம் |
||
வகுப்பு |
ஆண்கள் |
பெண்கள் (ம) திருநங்கை |
பொதுப்பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்டவகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் (MBC/DNC) |
170 செ.மீ. |
159 செ.மீ. |
ii. ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
167 செ.மீ. |
157 செ.மீ. |
மார்பளவு அளத்தல் (ஆண்களுக்கு மட்டும்) |
||
சாதாரண நிலையில் |
81 செ.மீ. |
|
மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் விரிவாக்கம் |
5 செ.மீ. |
|
முன்னாள் இராணுவத்தினர்/ இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும்கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவவீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்தியஆயுத காவல் படையினர். |
உடல்கூறு அளத்தல் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். |
ஈ. உடற்தகுதித் தேர்வு :
ஆண்கள் |
1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். |
பெண்கள் மற்றும் திருநங்கை |
400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். |
முன்னாள் இராணுவத்தினர்/ இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவ வீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல்படையினர். |
1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். |
i) உடற்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii)உடற் தகுதித் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே, அடுத்தகட்டத் தேர்வான உடற்திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
உ. உடல்திறன் போட்டி : (மொத்த மதிப்பெண்கள் -15)
விண்ணப்பதாரர்கள் உடற்திறன் போட்டியில் உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.
(i) ஆண் விண்ணப்பதாரர்கள் :-
வ.எண் |
நிகழ்வுகள் |
பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) |
ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) |
இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) |
|
1 |
கயிறு ஏறுதல் |
5.0 மீட்டருக்கு குறைவாக |
5.0 மீட்டர் |
6.0 மீட்டர் |
|
2 |
நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் |
நீளம் தாண்டுதல் |
3.80 மீட்டருக்கு குறைவாக |
3.80 மீட்டர் |
4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் |
1.20 மீட்டருக்கு குறைவாக |
1.20 மீட்டர் |
1.40 மீட்டர் |
||
3 |
100 மீட்டர் ஓட்டம் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் |
100 மீட்டர் ஓட்டம் |
15.00 வினாடிகளுக்கும் அதிகமாக |
15.00 வினாடிகள் |
13.50 வினாடிகள் |
400 மீட்டர் ஓட்டம் |
80.00 வினாடிகளுக்கும் அதிகமாக |
80.00 வினாடிகள் |
70.00 வினாடிகள் |
1. கயிறு ஏறுதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
2. 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
(ii) பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள்:
வ.எண் |
நிகழ்வுகள் |
பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) |
ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) |
இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) |
|
1 |
நீளம் தாண்டுதல் |
3.0 மீட்டருக்கு குறைவாக |
3.00 மீட்டர் |
3.75 மீட்டர் |
|
2 |
குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் |
குண்டு எறிதல் |
4.25 மீட்டருக்கு குறைவாக |
4.25 மீட்டர் |
5.50 மீட்டர் |
கிரிக்கெட் பந்து எறிதல் |
17 மீட்டருக்கு குறைவாக |
17 மீட்டர் |
24 மீட்டர் |
||
3 |
ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் |
100 மீட்டர் ஓட்டம் |
17.50 வினாடிகளுக்கும் அதிகமாக |
17.50 வினாடிகள் |
15.50 வினாடிகள் |
200 மீட்டர் ஓட்டம் |
38.00 வினாடிகளுக்கும் அதிகமாக |
38.00 வினாடிகள் |
33.00 வினாடிகள் |
i. நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
ii. 100 மீட்டர் ஓட்டம் / 200 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்
iii.முன்னாள் இராணுவத்தினர் / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள இராணுவவீரர்கள் / முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் (Ex-CAPF) / இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள மத்திய ஆயுத காவல்படையினர்.
வ.எண் |
நிகழ்வுகள் |
பூஜ்ய நட்சத்திரம் (0 மதிப்பெண்) |
ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) |
இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) |
|
1 |
குண்டு எறிதல் (7.26 kg) |
5.0 மீட்டருக்கு குறைவாக |
5.0 மீட்டர் |
6.0 மீட்டர் |
|
2 |
நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் |
நீளம் தாண்டுதல் |
3.25 மீட்டருக்கு குறைவாக |
3.25 மீட்டர் |
4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் |
0.90 மீட்டருக்கு குறைவாக |
0.90 மீட்டர் |
1.40 மீட்டர் |
||
3 |
ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் |
100 மீட்டர் ஓட்டம் |
17.00 வினாடிகளுக்கும் அதிகமாக |
17.00 வினாடிகள் |
13.50 வினாடிகள் |
400 மீட்டர் ஓட்டம் |
85.00 வினாடிகளுக்கும் அதிகமாக |
85.00 வினாடிகள் |
70.00 வினாடிகள் |
i.குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் / உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
ii. 100 மீட்டர் ஓட்டம் / 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
10. துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள் :-
அ. எழுத்துத் தேர்வு
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு
துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது விண்ணப்பதாரர்களுக்கும் தமிழ்மொழித் தகுதித் தேர்வு ஒன்றாக நடத்தப்படும்.
பகுதி – II (அ). 20% காவல்துறை ஒதுக்கீட்டிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு:
முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ) – பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):- தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்பு திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability), பாரதீய நியாய சன்ஹிதா (BNS), பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (BSA), காவல் நிலை ஆணைகள் (Police Standing Orders) மற்றும் காவல் நிர்வாகம் (Police Administration) ஆகியவற்றை உள்ளடக்கியது.
எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 85.
i. பகுதி (அ) – 15 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 30 வினாக்கள்.
ii. பகுதி (ஆ) – 70 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) 140 வினாக்கள்.
iii. ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிப்பெண்கள்.
iv. தேர்வுக்கானகாலஅளவு:3 மணிநேரம்.
v. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதிபெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பகுதி – II ((ஆ). 20% தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை ஒதுக்கீட்டிற்கான முதன்மை எழுத்துத்தேர்வு:
முதன்மை எழுத்துத் தேர்வானது பகுதி (அ)- பொது அறிவு மற்றும் பகுதி (ஆ) உளவியல் தேர்வு (Psychology Test):-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Skills), மனத்திறன் (Mental Ability), தொடர்பு திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability), தீயணைப்பு & மீட்புப்பணி தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகள் (Rules & Regulations Relating to Fire & Rescue Services), நிலைய நடைமுறை (Station Routine), தமிழ்நாடு தீயணைப்பு துறை நடைமுறை நூல் (Tamil Nadu Fire Service Manual) மற்றும் தீயணைப்பு மீட்புப்பணித் துறை நிர்வாகம் (Administration of Fire & Rescue Services) ஆகியவற்றை உள்ளடக்கியது.
எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் - 85.
i. பகுதி (அ) – 15 மதிப்பெண்கள்(கொள்குறி வகை வினா) 30 வினாக்கள்.
ii. பகுதி (ஆ) – 70 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)140 வினாக்கள்.
iii. ஒவ்வொரு கேள்விக்கும் 1/2 மதிப்பெண்கள்.
iv. தேர்வுக்கான கால அளவு: 3 மணி நேரம்.
v. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. சான்றிதழ்கள் சரிபார்த்தல் :
சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும், விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அசல்சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உரிமைகளை இழப்பர்.
இ. துறைசார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்திறன் தேர்வு ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஈ.உடற்தகுதித் தேர்வு :
i. ஆண் விண்ணப்பதாரர்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்கவேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்கவேண்டும்.
ii. உடற்தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
11. நேர்முகத் தேர்வு :
i. நேர்முக தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ii. விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். காலிப்பணியிடங்களின் இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
12. பொது விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர்படை / நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மதிப்பெண்கள். :
நேர்முகத் தேர்விற்க்கு பிறகு விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு அதிகபட்சம் 5 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அ. தேசிய மாணவர்படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் |
½ மதிப்பெண் |
“B” சான்றிதழ் உடையவர்கள் |
1 மதிப்பெண் |
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் – அகில இந்திய அளவில் சிறந்த மாணவர். |
2 மதிப்பெண்கள் |
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :
1).புதுடெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பு போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு / தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்கமுகாம் / மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையினால் மாநிலங்களுக்கிடையே நடத்தப்படும் இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்குபெற்றவர்கள். |
½ மதிப்பெண் |
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புது டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர். |
1 மதிப்பெண். |
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்)
அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல்பந்து 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச்சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளுதூக்குதல் 12. நீச்சல்போட்டி 13. தடகளப்போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கிசுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பள்ளியின் சார்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் |
1/2 மதிப்பெண் |
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் |
1/2 மதிப்பெண் |
பல்கலைக்கழகங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் (படிவம் III) (பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான) |
1 மதிப்பெண் |
மாவட்டங்கள் சார்பாகமாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில்கலந்து கொண்டவர்கள் |
1 மதிப்பெண் |
தமிழ்நாடு சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் (படிவம் II) |
1 ½ மதிப்பெண்கள் |
பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டவர்கள் (படிவம் I) |
2 மதிப்பெண்கள் |
ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட சான்றிதழுக்கு மட்டுமே அதிகபட்ச மதிப்பெண் வழங்கப்படும். ஒருவிண்ணப்பதாரர் ஒரே மதிப்பெண்கள் பெற தகுதியுடைய இரண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் சிறப்பு மதிப்பெண்களாக அதிகபட்சம் 5 மதிப்பெண்கள் மட்டுமே கோர முடியும்.
13.(அ) காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித்திறன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்) |
|
தங்கப் பதக்கம் |
5 மதிப்பெண்கள் |
வெள்ளிப் பதக்கம் |
3 மதிப்பெண்கள் |
வெண்கலப் பதக்கம் |
2 மதிப்பெண்கள் |
(ஆ) தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் :
மொத்த பணிக்காலத்தில் பெற்ற பதக்கங்கள் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்) |
|
குடியரசுத் தலைவரின் தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அல்லது) தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அல்லது) அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான வீரதீரப் பதக்கம் (அண்ணா பதக்கம்). |
5 மதிப்பெண்கள் |
தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான சிறப்பு பணிப் பதக்கம் (அல்லது) தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா வீரதீரப் பதக்கம் (குடியரசு தினம்) |
3 மதிப்பெண்கள் |
மெச்சத்தக்கப் பணிக்கான தீயணைப்பு பணிப் பதக்கம் (அல்லது) அண்ணா பிறந்தநாளன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிப் பதக்கம் (அண்ணா பதக்கம்). |
2 மதிப்பெண்கள் |
தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்பு பணிப் பதக்கம் (பொங்கல் நாள்) |
1 மதிப்பெண் |
காவல் மற்றும் தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர்படை / நாட்டு நலப்பணிதிட்டம் / விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியற்றவர் ஆவார்.
ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் மட்டுமே கோரமுடியும். ஒரு விண்ணப்பதாரர் சம மதிப்பெண்கள் பெறக்கூடிய இரண்டு பதக்கங்களைப் பெற்றிருப்பின், ஒரு பதக்கத்திற்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.
14. தற்காலிகத் தேர்வுப்பட்டியல் :
அ. எழுத்துத் தேர்வு, உடல்திறன் போட்டி, நேர்முகத்தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு, விண்ணப்பதாரர் சார்ந்த பிரிவு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வுபட்டியல் தயார்செய்யப்படும்.
ஆ. நிலைய அலுவலர் பதவிக்கு, அனைத்து தகுதிகளும் சமமாக இருக்கும் பட்சத்தில், நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் ஏதேனும் ஒரு பயிற்சிவகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த நபருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இ. இறுதி தற்காலிகத் தேர்வின்போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதியையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்குபெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ஈ. இறுதி தற்காலிகத் தேர்வின்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின்போது முன்னுரிமை வழங்கப்படும்.
15. மருத்துவப் பரிசோதனை, குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த விசாரணை:
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும், குணநலன்கள் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறையினரால் உட்படுத்தப்படுவார்கள்.
16. தேர்வுக் கட்டணம் :
தேர்வுகட்டணம் ரூபாய்.500/-.துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் துறைசார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து விண்ணப்பித்தால் அவர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். தேர்வு கட்டணத்தை இணைய வழியில் மட்டுமே செலுத்த இயலும்.
காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பதவிக்கான தேர்வு
1.வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.
பிரிவு |
உச்ச வயது வரம்பு |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர். |
32 வருடங்கள் |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் |
35 வருடங்கள் |
திருநங்கைகள் |
35 வருடங்கள் |
ஆதரவற்ற விதவைகள் |
37 வருடங்கள் |
முன்னாள் இராணுவத்தினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் . |
47 வருடங்கள் |
20% காவல் துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் |
47 வருடங்கள் |
2. கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி குழுமத்தால் வழங்கப்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் (B.E/B.Tech) பெற்றிருக்க வேண்டும்
3.வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு :
அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு |
31% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
26.5% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) |
3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் |
20% |
ஆதிதிராவிட வகுப்பினர் |
15% |
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் |
3% |
பழங்குடியின வகுப்பினர் |
1% |
ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
4. 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு :
காவலர் முதல் தலைமை காவலர்கள் வரை, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் அவர்களுக்கு சமமான பதவியில் இருப்பவர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் அவர்கள் 5 வருடங்கள் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளவீட்டுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:5 விகிதத்திலும், நேர்முகத்தேர்விற்கு 1:3 விகிதத்திலும் அழைக்கப்படுவார்கள்.
5. சிறப்பு பிரிவினருக்கான சலுகைகள் :
அ. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் :
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 47 வருடங்கள்.
ii. முன்னாள் இராணுவத்தினர் ( இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் ) மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் மட்டும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
iii. தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
ஆ. ஆதரவற்ற விதவை :
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 37 வருடங்கள்.
ii. ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சார் ஆட்சியர் (Sub-Collector) - உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆதரவற்ற விதவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.
6. திருநங்கைகள் :
i. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 35 வருடங்கள்.
ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம்பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்துகொண்டு உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல்தகுதிக் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.
iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் சார்ந்திருக்கும் வகுப்பினைப் பொருத்து வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.
v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.
7. தேர்வுக் கட்டணம் :
தேர்வுக் கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.
8. எழுத்துத் தேர்வு மற்றும் பகிர்தளிக்கப்படும் மதிப்பெண்கள் விவரம் :
தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு குழுமத்தால் கீழ்கண்டவாறு மதிப்பெண்கள் பகிர்தளிக்கப்படும்.
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:
i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.
iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).
iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.
vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.
பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:
வ.எண் |
தேர்வுகள் |
மதிப்பெண்கள் |
|
1 |
முதன்மை எழுத்துத் தேர்வு |
80 மதிப்பெண்கள் |
|
2 |
கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் |
5 மதிப்பெண்கள் |
|
3 |
சிறப்பு மதிப்பெண்கள் |
5 மதிப்பெண்கள் |
பொது விண்ணப்பதாரர்கள் |
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்: |
|||
4 |
நேர்முகத் தேர்வு |
10 மதிப்பெண்கள் |
|
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
i. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 80 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ii. வினாத்தாளில் 160 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.
9. உடற்கூறு அளத்தல் தேர்வு :
முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்விற்கு அதாவது உடற்கூறு அளத்தல் தேர்விற்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள். உடற்கூறு அளத்தல் தேர்வில் ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவீடும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் மட்டுமே அளவீடு செய்யப்படும். குறைந்தபட்ச தகுதி பின்வருமாறு.
அ) ஆண்கள் :-
உயரம் |
|
பொதுப் பிரிவினர் (OC), |
குறைந்தபட்சம் 163 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST) |
குறைந்தபட்சம் 160 செ.மீ. |
மார்பளவு அளத்தல் |
|
(i) சாதாரண நிலையில் |
குறைந்தபட்சம் 80 செ.மீ. |
ஆ). பெண்கள் மற்றும் திருநங்கைகள் :
உயரம் |
|
பொதுப் பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்தபட்சம் 154 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST) |
குறைந்தபட்சம் 152 செ.மீ. |
குறிப்பு :-
i. 20% காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ii. உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொது விண்ணப்பதாரர்கள் மட்டும் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்றே காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள்.
10. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் :
i. உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொது விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
ii. முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 1:5 விகிதத்தில் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
iii. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களைத் தவிர புதிய சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
11. நேர்முகத் தேர்வு :
i. முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
ii. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுவாரிய தலைமையகத்தில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போதுஅனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
iii. காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களைத் தவிர, மாநில அரசில் அரசு ஊழியர்களாக பணிபுரியும் விண்ணப்பதாரர்கள், அவரவர்கள் பணிபுரியும் பிரிவுத் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
iv. தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் அல்லது தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் (காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்) பெறப்பட்ட பதக்கங்களை வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை ஒரு புகைப்பட நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
12. கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் :
கூடுதல் கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு கூடுதல் மதிப்பெண்கள் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த கூடுதல் மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வின் போதுபின்வரும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.
கல்வித்தகுதி |
மதிப்பெண்கள் |
இளங்கலைப் பொறியியலில் பட்டம் (மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) - 4 வருடங்கள் B.E. (ECE) |
2 |
கணினி பயன்பாட்டு கல்வியில் இளங்கலை பட்டம் / கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப இளங்கலை அறிவியலில் பட்டம் - 3 வருடங்கள் BCA/B.Sc(CS)/B.Sc(IT) |
2 |
கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல் தொழில்நுட்ப பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப பொறியியலில் இளங்கலை பட்டம் - 4 வருடங்கள் B.E(C.S) or B.Tech(C.S) or B.E (I.T) |
3 |
கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டயப் படிப்பு - 1 வருடம் (PGDCA) |
1 |
தகவல் தொடர்பு அமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் அல்லது தகவல் தொடர்பு அமைப்பு தொழில்நுட்ப பொறியியலில் முதுகலைப்பட்டம் - 2 வருடங்கள் M.E (Communication System) or M.Tech (Communication System) |
1 |
கணினி அறிவியல் பொறியியலில் முதுகலைப்பட்டம் அல்லது கணினி அறிவியல் தொழில்நுட்ப பொறியியலில் முதுகலைப் பட்டம் - 2 வருடங்கள் M.E (C.S) or M.Tech (C.S) |
2 |
கணினி பயன்பாட்டு கல்வியில் முதுகலைப்பட்டம் - 3 வருடங்கள் MCA |
2 |
13. சிறப்பு மதிப்பெண்கள் : நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுகள் :
அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களுக்கு உட்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
I. பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் :
அ. தேசிய மாணவர் படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் |
½ மதிப்பெண் |
“B” சான்றிதழ் உடையவர்கள் |
1 மதிப்பெண் |
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர் |
2 மதிப்பெண்கள் |
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :
கீழ்க்காணும் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு – அ) குடியரசு தின அணி வகுப்பு - புதுடெல்லி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்க முகாம், மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையினால் மாநிலங்களுக்கிடையே இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்கு பெற்றவர்கள் |
½ மதிப்பெண் |
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் |
1 மதிப்பெண் |
அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள் |
1/2 மதிப்பெண் |
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : - 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16.சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
i) விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் விளையாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும்
ii. விண்ணப்பதாரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- I அல்லது படிவம் - IIஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் மூலம் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்.
iii. தமிழக பல்கலைக் கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு படிவம்-III பெற்றிருத்தல் வேண்டும்
பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
½ மதிப்பெண் |
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) |
1/2 மதிப்பெண் |
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் III (Inter University) |
1 மதிப்பெண் |
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
1 மதிப்பெண் |
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் II (Tamil Nadu) |
1 1/2 மதிப்பெண் |
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் I (India) |
2 மதிப்பெண்கள் |
ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட ஒரு சான்றிதழுக்கு மட்டுமே உயர்அளவு மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் ஒரே மதிப்பெண்கள் பெற தகுதியுடைய இரண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். மேலே சொல்லப்பட்ட மூன்று வகைச் சான்றிதழ்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் மொத்த சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்களுக்கு மிகாமல் இருக்கும்.
II. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்) |
|
தங்கப் பதக்கம் |
5 மதிப்பெண்கள் |
வெள்ளிப் பதக்கம் |
3 மதிப்பெண்கள் |
வெண்கலப் பதக்கம் |
2 மதிப்பெண்கள் |
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது |
14. தற்காலிகத் தேர்வுப் பட்டியல் :
அ. முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் (கல்வித் தகுதி) ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.
ஆ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை வழங்கப்படும்.
இ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதி, மாதம், ஆண்டினைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஈ. பொது விண்ணப்பதாரர்களில் 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட முதல் பட்டயப்படிப்பு அல்லது முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், அனைத்து நிலைகளிலும் மற்றும் காலிப்பணியிடங்களில் 20% ஒதுக்கீடு செய்யப்படும்.
15. மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை :
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பதவிகளுக்கான தேர்வு
1.வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.
பிரிவு |
உச்ச வயது வரம்பு |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் |
32 வருடங்கள் |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் |
35 வருடங்கள் |
திருநங்கைகள் |
35 வருடங்கள் |
ஆதரவற்ற விதவைகள் |
37 வருடங்கள் |
முன்னாள் இராணுவத்தினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் படை வீரர்கள் |
47 வருடங்கள் |
20% காவல் துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் |
47 வருடங்கள் |
2. கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலை அறிவியலில் பட்டம் ( 10+2+3 ) முறை.
3.வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு :
அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு |
31% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
26.5% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) |
3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் |
20% |
ஆதிதிராவிட வகுப்பினர் |
15% |
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் |
3% |
பழங்குடியின வகுப்பினர் |
1% |
ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
4. 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு :
20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் நபர் ஆனவர், அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் அவர்கள் 5 வருடங்கள் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு தனியாக நடைபெறும். தகுதியுடைய காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் பொது மற்றும் காவல் துறை சார்ந்த தேர்விற்கும் விண்ணப்பிக்கலாம். காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காவல் துறை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
5. சிறப்புப் பிரிவினருக்கான சலுகைகள் :
அ. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் படை வீரர்கள்:
i. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 47 வருடங்கள்.
ii. முன்னாள் இராணுவத்தினர் ( இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் ) மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் மட்டும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
ஆ. ஆதரவற்ற விதவை :
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 37 வருடங்கள்.
ii. ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சார் ஆட்சியர் (Sub-Collector) / உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆதரவற்ற விதவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.
6. திருநங்கைகள் :
i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1ம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 35 வருடங்கள்.
ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம்பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்து கொள்ளலாம்.திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.
iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் சார்ந்திருக்கும் வகுப்பினைப் பொருத்து வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.
v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.
7. தேர்வுக் கட்டணம் :
தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.
8. எழுத்துத் தேர்வு மற்றும் பகிர்தளிக்கப்படும் மதிப்பெண்கள் விவரம் :
தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கீழ்கண்டவாறு மதிப்பெண்கள் பகிர்தளிக்கப்படும்.
பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:
i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.
iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).
iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.
vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.
பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:
அ) பொது விண்ணப்பதாரர்கள் :
வ.எண். |
தேர்வுகள் |
மதிப்பெண்கள் |
|
i. |
முதன்மை எழுத்துத் தேர்வு |
85 மதிப்பெண்கள் |
|
(அ) பொது அறிவு |
55 மதிப்பெண்கள் |
||
(ஆ) பொதுத் திறனாய்வு (General Ability), தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), தொடர்புத் திறன் (Communication Skills) மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவற்றை உள்ளடக்கியது. |
30 மதிப்பெண்கள் |
||
ii. |
சிறப்பு மதிப்பெண்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டுகள். |
5 மதிப்பெண்கள் |
|
iii. |
நேர்முகத் தேர்வு |
10 மதிப்பெண்கள் |
|
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
குறிப்பு :
i. எழுத்துத் தேர்வுக்கான காலம் 3 மணி நேரம்.
ii. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 85 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
iii. வினாத்தாளில் 170 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.
ஆ. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் :
வ.எண். |
தேர்வுகள் |
மதிப்பெண்கள் |
|
i. |
முதன்மை எழுத்துத் தேர்வு |
85 |
|
(அ) பொது அறிவு |
45 |
||
(ஆ) பொதுத் திறனாய்வு (General Ability), காவல் நிர்வாகம் (Police Administration), குற்ற விசாரணை மற்றும் அடிப்படை தடய அறிவியல் (Crime Investigation and Basic Forensic Science), தருக்க பகுப்பாய்வுடன் கூடிய பொதுத் திறனாய்வு (General Ability Test includes Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் சோதனை (Psychology Test), தொடர்புத் திறன் மற்றும் தகவல்களை கையாளும் திறன் (Communication Skills and Information Handling ability), காவல் நிர்வாகம், குற்ற விசாரணை மற்றும் அடிப்படை தடய அறிவியல் பகுப்பாய்வு (Police Administration Crime Investigation and basic Forensic Science) காவலர்களின் அடிப்படை பயிற்சியில் கொடுக்கப்படும் பாடத்திட்டத்தின்படி இருக்கும். |
40 |
||
ii. |
சிறப்பு மதிப்பெண்கள் |
5 |
|
iii. |
நேர்முகத் தேர்வு |
10 |
|
மொத்தம் |
100 |
i. எழுத்துத் தேர்வுக்கான காலம் 3 மணி நேரம்.
ii. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 85 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
iii. வினாத்தாளில் 170 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.
9. உடற்கூறு அளத்தல் தேர்வு :
பொது ஒதுக்கீட்டு விண்ணப்பத்தாரர்களில் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கு மட்டுமே உடற்கூறு அளத்தல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்கூறு அளத்தல் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
உடற்கூறு அளத்தல் தேர்வு, உயரம் அளத்தல் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது. குறைந்தபட்சத் தகுதித் தேவை பின்வருமாறு.
I) ஆண்கள் :-
உயரம் |
|
பொதுப் பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்தபட்சம் 163 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்தபட்சம் 160 செ.மீ. |
II). பெண்கள் மற்றும் திருநங்கைகள் :-
உயரம் |
|
பொதுப் பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)], மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்தபட்சம் 154 செ.மீ. |
ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்தபட்சம் 152 செ.மீ. |
குறிப்பு :
i. 20% காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ii. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் உடல்கூறு அளத்தல் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
10. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் :
i) உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொதுவிண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
ii) துறை ஒதுக்கீட்டு விண்ணப்பத்தாரர்களில் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 விகிதத்தில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
iii) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 விகிதத்தில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்..
iv) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களைத் தவிர புதிய சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
11. நேர்முகத் தேர்வு :
i) உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றில் தகுதி பெற்ற அனைத்து பொது விண்ணப்பதாரர்களும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
ii) முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்ற காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடங்களுக்குகேற்ப 1:2 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்
iii) தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுவாரிய தலைமையகத்தில் நடத்தப்படும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்
iv) தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் அல்லது தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் பதக்கங்களை (காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்) பெற்ற விண்ணப்பதாரர்கள், சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை ஒரு புகைப்பட நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்
12. சிறப்பு மதிப்பெண்கள் : நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுகள் :
அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களுக்கு உட்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
I. பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் :
அ. தேசிய மாணவர் படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் |
½ மதிப்பெண் |
“B” சான்றிதழ் உடையவர்கள் |
1 மதிப்பெண் |
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர். |
2 மதிப்பெண்கள் |
ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :
கீழ்க்காணும் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு - அ) குடியரசு தின அணி வகுப்பு - புதுடெல்லி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்க முகாம், மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையினால் மாநிலங்களுக்கிடையே இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்கு பெற்றவர்கள். |
1/2 மதிப்பெண் |
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர். |
1 மதிப்பெண் |
அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள். |
1/2 மதிப்பெண் |
இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :
அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து(ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.
i) விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் விளையாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ii) விண்ணப்பதாரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- I அல்லது படிவம் - IIஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்
iii) தமிழக பல்கலைக் கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு படிவம்-III பெற்றிருத்தல் வேண்டும்.
பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
1/2 மதிப்பெண் |
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) |
1/2 மதிப்பெண் |
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் III (Inter University) |
1 மதிப்பெண் |
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
1 மதிப்பெண் |
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் II (Tamil Nadu) |
1 1/2 மதிப்பெண் |
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்டவர்கள்அதாவது படிவம் I (India) |
2 மதிப்பெண்கள் |
ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட சான்றிதழுக்கு மட்டுமே உயர்அளவு மதிப்பெண் வழங்கப்படும்.
II. 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித்திறன் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்) |
|
தங்கப் பதக்கம் |
5 மதிப்பெண்கள் |
வெள்ளிப் பதக்கம் |
3 மதிப்பெண்கள் |
வெண்கலப் பதக்கம் |
2 மதிப்பெண்கள் |
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியுடையவர் ஆவார். |
13. தற்காலிகத் தேர்வுப் பட்டியல் :
அ. முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.
ஆ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை வழங்கப்படும்.
இ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதி கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஈ. பொது விண்ணப்பதாரர்களில் 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு தேர்வு நிலையிலும் முன்னுரிமை அடிப்படையில், அனைத்து காலிப்பணியிடங்களில் 20% ஒதுக்கீடு வழங்கப்படும்.
14. மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை :
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு
1. கல்வித் தகுதி:
(i). |
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கோரும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்வதற்குரிய சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் 10-ம் வகுப்பு தேர்ச்சி இணைக்கல்விச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது. |
(ii). |
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். |
(iii). |
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர் |
2. அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதியன்று 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:
பிரிவு |
உச்ச வயது வரம்பு |
பொதுப் பிரிவு |
26 வயது |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் |
28 வயது |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் |
31 வயது |
திருநங்கைகள் |
31 வயது |
ஆதரவற்ற விதவைகள் |
37 வயது |
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் |
47 வயது |
3. வகுப்புவாரி இடஒதுக்கீடுகள் :
i. அரசு விதிகள் மற்றும் உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஓதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன
பொதுப் பிரிவு |
31% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
26.5% |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) |
3.5% |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் |
20% |
ஆதிதிராவிட வகுப்பினர் |
15% |
ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்) |
3% |
பழங்குடியின வகுப்பினர் |
1% |
ii) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழைப் பெற்றிருப்பர்வகள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படுவார்கள்.
4) சிறப்பு ஒதுக்கீடுகள் :
I) 10% விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு:
காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இத்தேர்விற்கு விளம்பரம் வெளியிட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்குள் கலந்துகொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம் - I / படிவம் - II / படிவம் – III-ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் அல்லது தமிழக பல்கலைக்கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளின் மூலம் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்.
விளையாட்டுப் படிவத்தின் பெயர் |
விவரம் |
சான்றிதழ் வழங்கும் அலுவலர் |
படிவம் - I |
இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர். |
செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு. |
படிவம் - II. |
தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டவர் |
செயலாளர், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது செயலாளர், மாநில விளையாட்டு அமைப்பு. |
படிவம் - III. |
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டவர் |
கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்புஅதிகாரி |
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் :
1.கூடைப்பந்து 2.கால்பந்து 3.வளைகோல் பந்து(ஹாக்கி) 4.கையுந்துபந்து 5.கைப்பந்து 6.கபடி 7.மல்யுத்தம் 8.குத்துச்சண்டை 9.ஜிம்னாஸ்டிக்ஸ் 10.ஜூடோ 11.பளுதூக்குதல் 12.நீச்சல்போட்டி 13.தடகளப் போட்டிகள் 14.குதிரையேற்றம் 15.துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம்.
II) 5% இடஒதுக்கீடு
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்:
i. முன்னாள் இராணுவத்தினர் அவர்களது இணையவழி விண்ணப்பத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதி குறிப்பிட்ட சான்றிதழை (Discharge certificate with date of discharge) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ii. முன்னாள் இராணுவத்தினர் தங்கள் டிஸ்சார்ஜ் சான்றிதழை பதிவேற்றத் தவறினால், அவர்களின் விண்ணப்பம் முன்னாள் படைவீரர் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படாது.
iii. இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது இணையவழி விண்ணப்பத்தில் சுயஉறுதிமொழியுடன் கூடிய தங்களது படை பிரிவு அலுவலரிடத்தில் (commanding officer) விடுவிக்கப்படும் தேதி குறிப்பிட்ட (going to retire) உரிய படிவத்தில் பெற்ற சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் (மாதிரிச் சான்றிதழ் பிற்சேர்க்கையில் உள்ளது). இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தவறினால் இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
iv. முன்னாள் இராணுவத்தினர் , இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
III) 3% ஆதரவற்ற விதவைகளுக்கான (Destitute Widow) ஒதுக்கீடு:
(i) மாவட்ட/மாநகர ஆயுதப்படைக்கான பெண்கள், திருநங்கைகள் மற்றும் சிறைத்துறை பெண்களுக்குரிய காலிப்பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு ஒதுக்கப்படும்.
(ii) ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO / சார் ஆட்சியர் (Sub-Collector) / உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தவறினால் இவ்வொதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டார்கள்.
5. 20% தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை:
இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வகுப்பு வாரியாக 20% முன்னுரிமை ஒவ்வொரு தேர்வு நிலையிலும் வழங்கப்படும்.
6. திருநங்கைகள் (Transgenders):
(i) திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்துகொள்ளலாம். திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவரென விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
(ii) திருநங்கைகள், ஆண் பாலினத்தை தேர்வு செய்தால் ஆண்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும், பெண் அல்லது மூன்றாம் பாலினத்தை தேர்வு செய்தால் பெண்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.
(iii) திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள்
(iv) திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிக் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.
(v) திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்
7. மதிப்பெண்கள் ஒதுக்கீடு :
வ.எண் |
விவரங்கள் |
மதிப்பெண்கள் |
1 |
முதன்மை எழுத்துத் தேர்வு |
70 மதிப்பெண்கள் |
2 |
உடல்திறன் போட்டிகள் |
24 மதிப்பெண்கள் |
3 |
சிறப்பு மதிப்பெண்கள் |
6 மதிப்பெண்கள் |
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
8. எழுத்துத் தேர்வு:
பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு:
i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாதாளாக இருக்கும்.
iii. இத்தேர்வானது 80 மதிப்பெண்கள் 80 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 80 நிமிடங்கள். (1 மணி 20 நிமிடங்கள்).
iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
பகுதி – II, முதன்மை எழுத்துத் தேர்வு:
i)பகுதி – அ: பொது அறிவு - 45 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) பகுதி – ஆ: உளவியல் - 25 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) |
ii) எழுத்துத் தேர்வுக்கான நேரம் 1 மணி 20 நிமிடங்கள் |
iii) எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும் |
9. உடற்கூறு அளத்தலல் (Physical Measurement Test)
உடற்கூறு அளத்தலில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் நடைபெறும் , பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் அளத்தல் மட்டுமே நடைபெறும், இத்தேர்வுக்கான குறைந்தபட்ச உடற்கூறு அளவுகள் பின்வருமாறு
(i) ஆண்கள்
உயரம் |
|
i) பொதுப் பிரிவினர் (OC), |
குறைந்த அளவு 170 செ.மீ. |
(ii) ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்த அளவு 167 செ.மீ. |
மார்பளவு |
|
i) சாதாரண நிலையில் (ii) மூச்சை உள்வாங்கிய நிலையில் விரிவாக்கம் |
குறைந்த அளவு 81 செ.மீ குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ (மூச்சை உள்வாங்கிய விரிவாக்க நிலையில் குறைந்த அளவு 86 செ.மீ) |
(ii) பெண்கள் மற்றும் திருநங்கைகள் :
உயரம் |
|
(i) பொதுப் பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) [BC(M)] மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் (MBC/DNC) |
குறைந்த அளவு 159 செ.மீ. |
(ii)ஆதிதிராவிடர் (SC), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)], பழங்குடியினர் (ST). |
குறைந்த அளவு 157 செ.மீ. |
(iii) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஒய்வுபெறவுள்ள இராணுவத்தினர் .
இவர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வு (Physical Measurement Test) கிடையாது.
10 . உடல்தகுதித் தேர்வு (Endurance Test)
(i) |
ஆண்கள் |
1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். |
(ii) |
பெண்கள் மற்றும் திருநங்கைகள் |
400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும் |
(iii) |
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இதேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் இராணுவப் படை வீரர்கள் |
1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் |
11. உடல்திறன் போட்டி (Physical Efficiency Test)
விண்ணப்பதாரர் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மதிப்பெண் ஏதும் வழங்கப்படாமல் அடுத்த போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.
அ) ஆண்கள்:
வ. எண் |
நிகழ்வுகள் |
ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள் ) |
இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்) |
|
1 |
கயிறு ஏறுதல் |
5.0 மீட்டர் |
6.0 மீட்டர் |
|
2 |
நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் |
நீளம் தாண்டுதல் |
3.80 மீட்டர் |
4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் |
1.20 மீட்டர் |
1.40 மீட்டர் |
||
3 |
ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் |
100 மீட்டர் |
15.00 வினாடிகள் |
13.50 வினாடிகள் |
400 மீட்டர் |
80.00 வினாடிகள் |
70.00 வினாடிகள் |
i. ஆண் விண்ணப்பதாரர்கள் கயிறு ஏறுதல் நிகழ்வில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.
ii. நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
iii. 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
ஆ) பெண்கள் மற்றும் திருநங்கைகள்:
வ. எண் |
நிகழ்வுகள் |
ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள்) |
இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்) |
|
1 |
நீளம் தாண்டுதல் |
3.0 மீட்டர் |
3.75 மீட்டர் |
|
2 |
குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் |
குண்டு எறிதல் (4 Kg) |
4.25 மீட்டர் |
5.50 மீட்டர் |
கிரிக்கெட் பந்து எறிதல் |
17 மீட்டர் |
24 மீட்டர் |
||
3 |
ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் |
100 மீட்டர் |
17.50 வினாடிகள் |
15.50 வினாடிகள் |
200 மீட்டர் |
38.00 வினாடிகள் |
33.00 வினாடிகள் |
i) நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ii) 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் நிகழ்வில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
இ) முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்:
வ. எண் |
நிகழ்வுகள் |
ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) |
இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) |
|
1 |
குண்டு எறிதல் (7.26 kg) |
5.0 மீட்டர் |
6.0 மீட்டர் |
|
2 |
நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் |
நீளம் தாண்டுதல் |
3.25 மீட்டர் |
4.50 மீட்டர் |
உயரம் தாண்டுதல் |
0.90 மீட்டர் |
1.40 மீட்டர் |
||
3 |
ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் |
100 மீட்டர் ஓட்டம் |
17.00 வினாடிகள் |
13.50 வினாடிகள் |
400 மீட்டர் ஓட்டம் |
85.00 வினாடிகள் |
70.00 வினாடிகள் |
i) குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும்.
ii) 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்ட நிகழ்வில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.
12. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் (Original Certificate Verification)
அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் மட்டுமே சரிபார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு, வயதுதளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் ஏதேனும் புதிய சான்றிதழ்கள் / நகல்கள் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அவை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
13. சிறப்பு மதிப்பெண்கள் (Special marks for NCC, NSS and Sports/Games)
விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் உயர்அளவாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ) தேசிய மாணவர் படை (NCC) (உயர் அளவு மதிப்பெண்கள்- 2 )
ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் |
1/2 மதிப்பெண் |
“B” சான்றிதழ் உடையவர்கள் |
1 மதிப்பெண் |
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர். |
2 மதிப்பெண்கள் |
ஆ) நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) (உயர் அளவு மதிப்பெண்- 2)
i) |
மாநில இளைஞர் விருது - அ) குடியரசு தின அணி வகுப்பு மேற்காணும் சான்றிதழ்கள் Ministry of Youth Affairs and Sports, Government of India and its Sub-ordinate Office viz. NSS Regional Centres and by the State Governments concerned, Youth Welfare Department ஆல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். |
2மதிப்பெண்கள் |
சான்றிதழ் Vice Chancellor/ Head of the Educational Institution / CEO / Programme Co-ordinator இவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். |
||
ii) |
நாட்டு நலப் பணி திட்டத்தில் 2 ஆண்டுகள் முடித்தவர்கள்/ நாட்டு நலப் பணி திட்டத்தில் பங்குபெற்று, அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் / மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள். |
1 மதிப்பெண். |
iii) |
திட்டச்செயல் தொண்டர்கள், மாவட்டத்திற்க்குள் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
½ மதிப்பெண். |
இ. விளையாட்டு (உயர் அளவு மதிப்பெண்- 2)
அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகள்: 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல்பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16. சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
1/2 மதிப்பெண் |
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டலப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) |
1/2 மதிப்பெண் |
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் III) (Inter University) |
1 மதிப்பெண் |
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் |
1 மதிப்பெண் |
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் II) (Tamil Nadu) |
1 ½ மதிப்பெண்கள் |
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது (படிவம் - 1) (India) |
2மதிப்பெண்கள் |
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு விளையாட்டுப் படிவம் I அல்லது II அல்லது III அல்லது பிற விளையாட்டுச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் மட்டும் மட்டுமே வழங்கப்படும். (10% விளையாட்டு ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.)
விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கும் NCC/NSS/Sports/Games சான்றிதழ்களில், ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட ஒரு சான்றிதழுக்கு மட்டுமே உயர் அளவு மதிப்பெண் வழங்கப்படும். ஒரே மதிப்பெண் தகுதியில் ஒரு விண்ணப்பதாரர் இரண்டு சான்றிதழ்கள் பெற்றிருக்கும் பட்சத்தில் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும்.
மேலே சொல்லப்பட்ட மூன்று வகைச் சான்றிதழ்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் மொத்த மதிப்பெண்கள் 6 மதிப்பெண்களுக்கு மிகாமல் இருக்கும்.
14 (அ) இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல் (Final Provisional Selection List)
- எழுத்து தேர்வு, உடல்திறன் போட்டி மற்றும் NCC, NSS, Sports/Games சான்றிதழ்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்களின் அடிப்படையிலும் மற்றும் விண்ணப்பத்தாரர்கள் தெரிவித்துள்ள பதவி விருப்ப முன்னுரிமைப்படியும், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்புவாரி விகிதாச்சாரத்தின்படி மாவட்ட / மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்கள் ஒரே தகுதி மதிப்பெண் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.
- இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒரே தகுதி மதிப்பெண் பெறும் விண்ணப்பத்தாரர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கதில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்பயிற்று மொழியில் பயின்றிருக்கும் விண்ணப்பத்தாரர்கள், 20% முன்னுரிமை அடிப்படையில் வகுப்பு வாரியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
(ஆ). மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை:
இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கும், முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் விசாரணைக்கும், காவல், சிறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலமாக உட்படுத்தபடுவார்கள்.
15. தேர்வுக் கட்டணம்: ரூ 250/-
தேர்வுக் கட்டணம் ரூபாய்.250/-. விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Start your journey toward success in government exams with the support of our dedicated team. Join us to gain expert guidance, comprehensive resources, and a community of motivated peers.